Thursday, September 29, 2011

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி ?

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி ?
1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ , கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் .
2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும் . அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும் . ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும் .
3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ - க்களை உபயோகித்தால் பிஸியாக , வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும் .
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும் .
6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே " எஸ் ...." என்றோ அல்லது " சக்சஸ் " என்றோ சொல்லுங்கள் .
7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள் .
8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள் , கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள் .
9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள் . அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும் , நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள் .
10.. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ , விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள் .
11.. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் , ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள் , பிறகு பிஸியாக இருந்தேன் , ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம் .
12.. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள் . கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள் . மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள் .
13.. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ , பைல்களையோ திறந்து வையுங்கள் . அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது , குளோஸ் செய்வது , மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள் .
14.. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள் . சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள் .
15.. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் ( உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும் ) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள் .
16.. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள் . அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் . கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என ( மற்றவர் காதில் ) விழும்படி சொல்லுங்கள் .
17.. ( வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால் ) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டிகொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள் . ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம் .
18.. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள் . நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்

Thursday, September 22, 2011

SMS JOKES

# கணக்கு டீச்சர்: நான் இவ்வளவு நேரம் பாடம் எடுத்ததுல உனக்கு என்ன தெரிஞ்சது?
மாணவன்: சாயங்காலம் ட்யூசன் போறது நல்லதுனு தெரிஞ்சது.

# படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.

# வேதனையோடு போன எனக்கு பச்சத்தண்ணி.. பட், வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பப்ஸ் & டீ!
இந்தக் கொடுமை எங்க நடக்குது தெரியுமா? ”EXAM HALL”

# சினம் கொண்ட சிங்கத்தை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் அடைக்க முடியுமா? முடியும்.. எப்படினு தெரியுமா? வந்து என் IDENTITY CARD-அ வாங்கிப் பாருங்க :)

# உன் நண்பனை அளவோடு நேசி; ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்
உன் பகைவனை அளவோடு வெறு; ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்.

# மெழுகுவர்த்திக்கு
உயிர் கொடுக்க
உயிர்விட்டது
தீக்குச்சி..
உயிர்கொடுத்த
நண்பனை
நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!
That’s True Friendship

# பொண்ணுங்க ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க :) [ரொம்ம்ம்ப ஓவர்ல]

# பாஸ் மூவி டயலாக்:
படிக்கனும்….படிக்கனும்….5 யூனிட்டும் படிக்கனும்…ஒரு டாபிக் விடாம படிக்கனும்….ஒரே நாளில் படிக்கனும்
சந்தானம்: அதுக்கு நீ “INDEX” தான் படிக்கனும்

# PROFESSOR: YOU HAVE PASSED ALL THE PAPERS IN THIS SEM.. HA HA HA
STUDENT: என்னைக் கலாய்ச்சிட்டாராமா…

# EXAM CENTRE:
BOY told GIRL “All the Best”
GIRL replied “All the Best”
RESULT:
GIRL – 80 Marks
BOY – 08 Marks
MORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்

# FULL FORMS:
WIFE = Worries Invited For Ever
LOVER = Loss Of Valuable Energy and Rupees
FRIEND = First Relationship In Earth that Never Dies
BOYS = Beauty Of Youth Society
GIRL = Gorillas In Real Life

# பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா? ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!

# பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? ரெண்டையும் திருத்தவே முடியாது! :-)

# நீ என்ன அவ்வளவு அழகா?
உன்னைப்
பார்த்தவுடனே
அனைத்தும்
மறந்து விடுகிறதே!!
By EXAM HALL-ல் கொஸ்டீன் பேப்பர் பார்த்துக் கவிதை எழுதுவோர் சங்கம்.

# GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?

# கடைக்காரன்: வாங்க.. இந்த துணி கிழியவே கிழியாது.. வாங்கிப் பாருங்க.
*&&$^##: அப்போ எனக்கு 2 மீட்டர் எப்படி கிழிச்சுத் தருவ??
கடைக்காரன்: ????

# டாக்டர்: டய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும்
நோயாளி: 10 பீர் சாப்பிட்டா?
டாக்டர்: தூக்க 108 வரும் :)

DISCLAIMER: இதெல்லாம் FORWARDED SMS தான். யாரையும் (Both Girls & Boys) புண்படுத்துறது என் நோக்கம் இல்ல.. இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காம அதுல இருக்குற HUMOUR மட்டும் எடுத்துக்கனும்னு வேண்டிக்கிறேன் :-)

காதல்.

காதல்..

ஒட்டுமொத்த உணர்வுகளையும்
உறையச் செய்துவிட்டு
ஒற்றைக்கால் மெழுகாய்
உருகிக் கொண்டிருக்கும்.

வார்த்தையில் வடிக்க எண்ணிக்
காத்திருக்கும் போதெல்லாம்
மொழியின் ஆளுமை
விழிபிதுங்கி நிற்கும்..

கைகொடுத்துத் தூக்கிவிட
எத்தனிக்கும் போதெல்லாம்
காற்றுக்கேது கால்களென
கடத்திக்கொண்டு போகும்..

எட்டும் தொலைவினில்
எழிலாய்ச் சிரிக்கும்
பற்ற எண்ணினால்
பட்டாம்பூச்சி ஆகும்..

உதடுகளின் உச்சரிப்பை
உதாசீனப் படுத்திவிட்டுக்
கண்களுக்குள்ளே சென்று
களவாடிப் போகும்..

ஓடிஒளிந்து போய்
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.

இதழ்களின் வழியே
இதயத்தை உறிஞ்சும்
இமைகள் சொருகி
இமையத்தைக் காணும்

அதட்டும் வேளையில்
அடங்கிப் போகும்
அப்புறமாய் வந்து
அழுகையை வார்க்கும்

கிடைப்பதை எல்லாம்
ஏற்க மறுக்கும்
கொடுக்க வேண்டியே
குறைபட்டுக் கொள்ளும்

விட்டுக் கொடுக்கும்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும்பின்
கட்டி அணைக்கும்.

வளர்பிறை நிலவாய்
வளர்ந்துவரும் காதல்
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!

Kavithai

என்றைக்கும் அல்லாத
ஞாயிறு ஒன்றில்
வந்து விழுந்ததொரு
‘மிஸ்ட் கால்’.

மிஸ்ட்கால் செய்தவர்
முகம் அறியாதவராயினும்
‘மிஸ்’ பண்ண விரும்பாத
மாடர்ன் மங்கை..

மெசேஜிற்குத் தாவி
அழைத்து உரையாடி
இணையம் வழியே
இதயங்களை இணைத்து

கவிதைகள் இயக்கி
கருத்துகள் பேசிக்
கவலைகள் பகிர்ந்து
கனவுகளில் பறந்து

மற்றும் ஒரு
ஞாயிறு ஒன்றில்
சந்திப்பும் நடந்தேறி
அண்ணலும் நோக்கி
அவளும் நோக்க

செம்புலப் பெயல்நீர்
கலந்தது போல
அன்புடை நெஞ்சம்
இரண்டும் கலந்தன..

காதல் பிறந்தது!

நாட்கள் ஓடின..

சுபயோக சுபதினம்
ஒன்றில்..
இருவருக்கும் திருமணம்
தனித்தனியாக!

எக்காலம் ஆயினும்
காதலுக்குக்
கண் தானில்லை
சாதி இருக்கிறது..
சாதியைக் கட்டிக்கொண்டு
புரளும் பெற்றோர்களும்
இருக்கிறார்கள்!

மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!

நன்றி