Javithkhan Portfolio
Tuesday, April 2, 2013
Thursday, October 6, 2011
ஸ்டீவ் ஜாப்ஸ்
நியூயார்க்: ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு , பில்கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் அவதியுற்ற ஸ்டீவ் ஜாப்ஸ்,56 , இறந்தார். கம்ப்யூட்டர் உலகில் புதிய சாதனை படைத்தவர். ஐ-போன், ஐ-பேடு என நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர் பில்கேட்ஸ் விடுத்து்ள்ள இரங்கல் செய்தியில், ஸ்டீவ் ஜாப்ஸூடன் இணைந்து பணியாற்றி அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன், நவீன கணினி புரட்சியினை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை ,இந்த உலகம் இழந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அவரை முதன்முதலாக சந்தி்த்தேன் அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்களாகினோம். ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்: கம்ப்யூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தி,உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரை இந்த கம்ப்யூட்டர் உலகம் இழந்துவிட்டது என சமூக இணையதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறினார்.
அர்னால்டு இரங்கல்: கலிபோர்னியா மக்களின் கனவை நனவாக்கி தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.கம்ப்யூட்டர் உலகின் முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் என கலிபோர்னியா மாகாண கவர்னரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்டுஸ்வாஸ்னேக்கர் டுவீட்டர் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நிம்மதி தேடி இந்தியா வந்த ஸ்டீவ் ஜாப்ஸ்: ஆப்பிள் நிறுவனரின் சுவாரசியமான மறுபக்கம் :
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நிறுவனத்தை துவக்க இந்தியா ஒரு முக்கிய காரணியாக இருந்த சுவாரசியமான தகவல் இதோ..
மூன்று ஆப்பிள்கள் உலகையே மாற்றியுள்ளன. ஒன்று ஏவாளின் கையில் கிடைத்த ஆப்பிள். இரண்டாவது நியூட்டனின் கையில் கிடைத்தது. மற்றொன்று தான் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் ஆப்பிள் தயாரிப்புகள். இன்றைய நிலையில், சமூக வலைதளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ் புக் போன்ற இணையங்களில் பரவிக்கிடக்கும் குறுந்தகவல் இது தான்.
உலகை புரட்டிப்போட்ட ஆப்பிள் தயாரிப்பு நாயகனின் ஆரம்ப கட்ட வாழ்க்கையில் இந்தியா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது நிச்சயம் உங்களுக்கு வியப்பை அளிக்கும். 73ம் ஆண்டில், தனது 18வது வயதில் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, தனது நண்பர் டான் கோட்டிக்குடன் மனநிம்மதி தேடி, இந்தியா வந்தார் ஜாப்ஸ். அப்போது தாங்கள் எங்கு தங்கி மன நிம்மதி பெறப்போகிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இந்தியா குறித்தும், அந்நாட்டின் வளமான தெய்வீகத்தன்மை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட போதனைகளுக்கும், இந்தியாவின் உண்மை நிலை (?)க்கும் உள்ள முரண்பாடுகளை கண்ட ஜாப்ஸ், மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிச்செல்வதென முடிவு செய்தார். அவர் தேடி வந்த நிர்வாணா (அ) மன நிம்மதி அவருக்கு கிடைக்க வில்லை.
ஜாப்ஸ் தனது சுயசரிதையான தி லிட்டில் கிங்டம்: தி பிரைவேட் ஸ்டோரி ஆப் ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “முதன் முதலாக நான் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்து உணர ஆரம்பித்தேன். இவ்வுலகை மேம்படுத்த அவர் கார்ல் மார்க்சை விட கரோலி பாபாவை விட, எடிசன் நிறைய செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். கரோலி பாபா என்பவர் ஸ்டீவ் ஜாப்சின் குரு. ஆன்மீக மார்க்கத்திற்கு திரும்பவிருந்த ஜாப்சை அறிவியல் மார்க்கத்திற்கு திருப்பியது இந்தியா. ஜாப்ஸ்க்கு தேவையான மனநிம்மதி இந்தியாவில் கிடைத்திருக்குமானால், உலகம் தனது மூன்றாவது ஆப்பிளை இழந்திருக்கும். இந்தியாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியா திரும்பிய ஸ்டீவ் முதற்காரியமாக ஆரம்பித்தது தான் ஆப்பிள் நிறுவனம்.
எத்தனையோ ஞானிகளை உருவாக்கிய இந்த இந்திய மண் தான், இன்று ஐ-பொருட்களின் தாயகமான ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கவும் காரணமாக அமைந்துள்ளது. அதற்கு கைமாறாகத்தான் என்னவோ, ஸ்டீவ் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விலை குறைந்த லேப் டாப்பான ஆகாஷை வெளியிட்டுள்ளது இந்தியா
Thursday, September 29, 2011
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி ?
Thursday, September 22, 2011
SMS JOKES
மாணவன்: சாயங்காலம் ட்யூசன் போறது நல்லதுனு தெரிஞ்சது.
# படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.
# வேதனையோடு போன எனக்கு பச்சத்தண்ணி.. பட், வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பப்ஸ் & டீ!
இந்தக் கொடுமை எங்க நடக்குது தெரியுமா? ”EXAM HALL”
# சினம் கொண்ட சிங்கத்தை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் அடைக்க முடியுமா? முடியும்.. எப்படினு தெரியுமா? வந்து என் IDENTITY CARD-அ வாங்கிப் பாருங்க :)
# உன் நண்பனை அளவோடு நேசி; ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்
உன் பகைவனை அளவோடு வெறு; ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்.
# மெழுகுவர்த்திக்கு
உயிர் கொடுக்க
உயிர்விட்டது
தீக்குச்சி..
உயிர்கொடுத்த
நண்பனை
நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!
That’s True Friendship
# பொண்ணுங்க ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க :) [ரொம்ம்ம்ப ஓவர்ல]
# பாஸ் மூவி டயலாக்:
படிக்கனும்….படிக்கனும்….5 யூனிட்டும் படிக்கனும்…ஒரு டாபிக் விடாம படிக்கனும்….ஒரே நாளில் படிக்கனும்
சந்தானம்: அதுக்கு நீ “INDEX” தான் படிக்கனும்
# PROFESSOR: YOU HAVE PASSED ALL THE PAPERS IN THIS SEM.. HA HA HA
STUDENT: என்னைக் கலாய்ச்சிட்டாராமா…
# EXAM CENTRE:
BOY told GIRL “All the Best”
GIRL replied “All the Best”
RESULT:
GIRL – 80 Marks
BOY – 08 Marks
MORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்
# FULL FORMS:
WIFE = Worries Invited For Ever
LOVER = Loss Of Valuable Energy and Rupees
FRIEND = First Relationship In Earth that Never Dies
BOYS = Beauty Of Youth Society
GIRL = Gorillas In Real Life
# பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா? ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!
# பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? ரெண்டையும் திருத்தவே முடியாது! :-)
# நீ என்ன அவ்வளவு அழகா?
உன்னைப்
பார்த்தவுடனே
அனைத்தும்
மறந்து விடுகிறதே!!
By EXAM HALL-ல் கொஸ்டீன் பேப்பர் பார்த்துக் கவிதை எழுதுவோர் சங்கம்.
# GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?
# கடைக்காரன்: வாங்க.. இந்த துணி கிழியவே கிழியாது.. வாங்கிப் பாருங்க.
*&&$^##: அப்போ எனக்கு 2 மீட்டர் எப்படி கிழிச்சுத் தருவ??
கடைக்காரன்: ????
# டாக்டர்: டய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும்
நோயாளி: 10 பீர் சாப்பிட்டா?
டாக்டர்: தூக்க 108 வரும் :)
DISCLAIMER: இதெல்லாம் FORWARDED SMS தான். யாரையும் (Both Girls & Boys) புண்படுத்துறது என் நோக்கம் இல்ல.. இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காம அதுல இருக்குற HUMOUR மட்டும் எடுத்துக்கனும்னு வேண்டிக்கிறேன் :-)




